புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 15 நவம்பர் 2017 (19:41 IST)

முல்லை பெரியாறு அணையில் பார்க்கிங்: கேரளா மகிழ்ச்சி!!

முல்லைப் பெரியாறு அணையில் பார்க்கிங் கட்டும் விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகள் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.


 
 
தேக்கடி ஆனைவாசலில் கார் பார்க்கிங் கட்ட கேரள அரசு முடிவு செய்தது. இதற்காக தேசிய புலிகள் காப்பகத்தில் விண்ணப்பித்து, அனுமதியும் பெற்றது.
 
அதன் பிறகு தமிழக அரசு தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தை நாடியது. ஆனால், தமிழக அரசு, முல்லைப் பெரியாறு அணை நீர் தேங்கும் இடம் என்பதால், கார் பார்க்கிங் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.
 
இந்நிலையில் கேரள அரசு கார் பார்க்கிங் கட்டிக் கொள்ள தடை விதிக்க முடியாது என்று தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. 
 
பார்க்கிங் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடம் யாருக்கு சொந்தம் என்பதை உச்சநீதிமன்றம் முடிவு செய்யும் என கூறப்பட்டுள்ளது.