பணக்காரர்களுக்கு வரி விலக்கு; ஏழைகளுக்கு வரி உயர்வு! – பினராயி விஜயன் கண்டனம்!
இந்தியா முழுவதும் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்ந்துள்ளது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்தியாவில் பெட்ரோல் டீசல் கடுமையான விலை உயர்வை சந்தித்து வரும் நிலையில் கேஸ் சிலிண்டர் விலையும் மாதம்தோறும் உயர்ந்து வருகிறது. எரிபொருட்களின் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களும் விலை உயர தொடங்கியுள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் எரிபொருள் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் “ஒன்றிய அரசின் தாராளமய பொருளாதார கொள்கையால் எரிபொருள் விலை தினமும் உயர்ந்து கொண்டே போகிறது. கடந்த 8 ஆண்டுகளாக எரிபொருள் மீது மத்திய அரசு விதித்துள்ள வரியே விலை உயர்வுக்கு காரணம். பெரும் பணக்காரர்களுக்கு வரிச்சலுகை அளித்துவிட்டு சாமானியர்கள் மீது வரிச்சுமை அளிக்கிறது மத்திய அரசு” என தெரிவித்துள்ளார்.