வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 5 பிப்ரவரி 2019 (15:50 IST)

ஃபேன்சி நம்பர வாங்குறதுக்கு இத்தன லட்சத்தையா செலவு பண்றது!!

தனது ஒரு கோடி ரூபாய் காருக்கு 31 லட்சம் செலவு செய்து பேன்சி நம்பரை வாங்கியுள்ளார் கேரள தொழிலதிபர் ஒருவர்.
 
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பாலகோபால் என்ற தொழிலதிபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் 1.20 கோடி மதிப்பில் ஆடம்பர சொகுசு காரை வாங்கினார். இதற்கு அவர் KL-01CK-1 என்ற பேன்சி நம்பரை வாங்க முடிவு செய்தார்.
 
திருவனந்தபுர வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் KL-01CK-1 பதிவு எண்ணுக்கான ஏலம் நடைபெற்றது. ஏலத்தின் ஆரம்பத் தொகையாக 5 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. இந்த நம்பரை 31 லட்சம் கொடுத்து பாலகோபால் வாங்கினார். நாட்டிலேயே அதிக தொகை கொடுத்து பேன்சி நம்பரை வாங்கியது இவர் தானாம். ஒவ்வொருவருக்கும் ஒரு கிரேஸ் இருக்கும், இவருக்கு இப்படி ஒரு கிரேஸ். ஆனாலும் இது கொஞ்சம் ஓவர் தான்...