வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 19 பிப்ரவரி 2020 (17:46 IST)

டெல்லியின் வளர்ச்சிக்காக அமித் ஷாவுடன் இணைந்த கெஜ்ரிவால் !

டெல்லியின் வளர்ச்சிக்காக அமித் ஷாவுடன் இணைந்த கெஜ்ரிவால் !

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று மதியம் முதல் முறையாக சந்தித்துப் பேசினார். அதில், டெல்லியின் வளர்ச்சிக்கு இருவரும் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
டெல்லி முதலமைச்சர் 3 வது முறையாக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்ற போது, டெல்லி மாநில வளர்ச்சிக்கு உறுதுணையாக செல்ல விரும்புவதாக தெரிவித்தார். இந்நிலையில்,  டெல்லியில் உள்ள அமித் ஷாவின் இல்லத்துக்கு சென்ற கெஜ்ரிவால் அவரைச் சந்தித்துப் பேசினார்.
 
இதையடுத்து, டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் அமித் ஷாவுடனான சந்திப்பு நல்லமுறையில் நடைபெற்றது. இருவரும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினோம். டெல்லியின் வளர்ச்சிக்காக இருவர் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.