1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 6 மே 2019 (09:57 IST)

அரசியல் மாற்றம் வருமா? சந்திரசேகர ராவ் - பினராயி விஜயன் சந்திப்பு!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க உள்ளார். 
 
நாடாளுமன்ற தேர்தல் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் நிலையில், மத்தியில் பாஜக, காங்கிரச் தவிர்த்து முன்றாவது அணியை உருவாக்க தீவிரம் காட்டி வருகிறார் சந்திரசேகர ராவ். அதன் ஒரு பங்காக அவர் ஒன்று கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க உள்ளார். 
 
இந்த தேர்தல் முடிவில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காது என் கருத்து கணிப்புகள் தெரிவிக்கும் நிலையில், இந்த கூட்டணியில் இடம்பெறாத மாநில கட்சிகளின் ஆதரவை பொருத்தே யார் ஆட்சி அமைப்பார் என்பது தெரியவரும். 
இதில், மாயாவதி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், பினராயி விஜயன் ஆகியோருக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது. எனவே, லோக்சபா தேர்தல் முடிவுகள் குறித்தும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி குறித்தும் பினராயி விஜயனுடன் பேச சந்திரசேகர ராவ் கேரளா செல்கிறார் என கூறப்படுகிறது.
 
இந்த அரசியல் சந்திப்பு முடிந்த பின்னரே அடுத்து என்ன நடக்கும் என்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.