காஷ்மீரில் நிலவும் சூழல் சரிசெய்யப்பட வேண்டும் என்று இணையவாசிகள் அனைவரும் பிராத்தனை செய்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் அசாதரண சூழ்நிலை நிலவி வரும் நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜம்முவில் நேற்று நள்ளிரவு முதல் இணையம் மற்றும் தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதோடு, பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் தனியார் கல்வி...