1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 19 மே 2017 (04:00 IST)

கார்த்தி சிதம்பரம் திடீர் லண்டன் பயணம்: சிபிஐ ரெய்டு எதிரொலியா?

பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா இந்திய வங்கிகளிடம் ஆயிரக்கணக்கான கோடிகளை கடன் வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு பறந்தோடினார். அவரை இந்தியாவுக்கு வரவழைக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று திடீரென கார்த்தி சிதம்பரமும் லண்டனுக்கு பறந்துவிட்டார்



 


சமீபத்தில் சிபிஐ அதிகாரிகள் கார்த்தி சிதம்பரம் வீட்டில் ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் விரைவில் கார்த்தி கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.

ஆனால் இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் தனது நண்பர்கள் சிலருடன் திடீரென லண்டன் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. சிபிஐ கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவே அவர் லண்டன் சென்றதாக கூறப்படும் நிலையில் கார்த்தி தரப்பு இதுகுறித்து கூறியபோது, 'கார்த்தி சிதம்பரத்தின் லண்டன் பயணம் ஏற்கெனவே திட்டமிட்டதுதான். லண்டன் பயணத்தை முடித்துவிட்டு வரும் 29-ம் தேதி இந்தியா வந்துவிடுவார்' என அவரது வட்டாரம் தெரிவிக்கிறது.