செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (16:56 IST)

கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார்: நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதி

Karthi
விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்திக் சிதம்பரம் மனு தாக்கல் செய்துள்ள நிலையில் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் செய்யப்பட மாட்டார் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை உறுதிகொள் உறுதி கூறியுள்ளது 
 
முன்னாள் நிதியமைச்சர் ப சிதம்பரத்தின் மகனும், மக்களவை எம்பியுமான கார்த்திக் சிதம்பரம் விசா முறைகேடு செய்ததாக வழக்கு தொடரப்பட்டது
 
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது 
 
இந்த நிலையில் இந்த மனு விசாரணை செய்யப்படும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரை கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட மாட்டார் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை உறுதி அளிப்பது என்பது குறிப்பிடத்தக்கது