திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 10 ஜூலை 2022 (09:48 IST)

பிறந்தநாளுக்கு 144 தடை உத்தரவு; பிரபல யூட்யூபர் கைது! – உ.பியில் பரபரப்பு!

Gaurav Taneja
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பிரபல யூட்யூபர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடியபோது கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசத்தில் பிரபலமான யூட்யூபராக இருப்பவர் கவுரவ் தனேஜா. இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பிறந்தநாளை உத்தர பிரதேச மெட்ரோ ரயில் நிலையத்தில் கொண்டாட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனால் ஆயிரக்கணக்கானோர் மெட்ரோ ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ள டோக்கனும் அப்பகுதியில் விநியோகிக்கப்பட்டுள்ளது. இந்த கொண்டாட்ட நிகழ்ச்சியால் மெட்ரோ ரயில் நிலையம் முழுவதும் கூட்டம் நிரம்பி வழிந்ததுடன், பயணிகளும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

அதிக நெருக்கடி ஏற்பட்டதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக கவுரவ் தனோஜாவை போலீஸார் கைது செய்துள்ளனர்.