கர்நாடகாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு?

karnataka
கர்நாடகாவில் இன்றைய கொரோனா வைரஸ் பாதிப்பு எவ்வளவு?
siva| Last Updated: புதன், 13 அக்டோபர் 2021 (18:59 IST)
கர்நாடக மாநிலத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 357 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமானவர்களின் எண்ணிக்கை 438 என்றும் அம்மாநில சுகாதாரத் துறை அறிவித்துள்ளது

மேலும் கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 9621 என்றும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த என்ணிக்கை 9621 என்றும் கொரோனாவால் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 37,916 என்றும், கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 29,09,656 அறிவிக்கப்பட்டுள்ளது

கர்நாடக மாநில சுகாதாரத்துறை எடுத்து வரும் அதிரடி நடவடிக்கை காரணமாக மாநிலத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் குறைந்து வருகிறது என்பதும் தமிழகத்தை விட அம்மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :