வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (21:02 IST)

தமிழக பட்ஜெட்டால் கர்நாடகத்தில் ஏற்பட்ட சிக்கல்!

தமிழகத்தில் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் காரணமாக கர்நாடக மாநில அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதும் அதில் முக்கிய அறிவிப்பாக பெட்ரோல் மீதான தமிழக அரசின் வரி ரூபாய் மூன்று குறைக்கப்படும் என அறிவித்தார். இதனை அடுத்து இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை ரூ.3 குறையும் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழகத்தில் மாநில அரசு வரியை குறைத்து பெட்ரோல் விலையை குறைத்தது போல் கர்நாடக மாநிலத்திலும் மாநில அரசின் வரியை குறைக்க வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்
 
பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் 3 குறைத்து லட்சக்கணக்கான சாமானியர்களின் வாழ்வில் தமிழக அரசு உதவியது போன்று கர்நாடகாவிலும் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை அவர் கேட்டுக் கொண்டுள்ளார் இதனால் கர்நாடக மாநில அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது