திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (13:04 IST)

பிரதமருக்கு முதல்வர் எழுதிய கடிதம் எதிரொலி.. காவிரி ஆற்றில் இருந்து நீர் திறப்பு..!

Cauvery
கடந்த சில நாட்களுக்கு முன் கர்நாடக மாநிலம் காவிரியில்  தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி இருந்தார். 
 
இந்த நிலையில் கர்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் 10,304 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
காவிரியில் நீர் திறக்கக் கோரி பிரதமருக்கு தமிழகம் சார்பில் கடிதம் எழுதப்பட்ட நிலையில், உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
மேலும் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து கர்நாடக பகுதிகளுக்கு பாசனத்திற்காக திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக தமிழகத்திற்கு நீர் திறந்துவிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வ் எளியாகியுள்ளது.
 
Edited by Mahendran