1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 27 மார்ச் 2022 (13:08 IST)

கர்நாடகாவில் மூடப்படும் மதராசா பள்ளிகள்..? – பாஜக எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து மதராசா பள்ளிகளை மூட வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கர்நாடகா உடுப்பி அரசு கல்லூரியில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்ட தடை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அரசு விதித்த தடையை அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக போராட்டங்களும் நடத்தப்பட்டது.

அதைதொடர்ந்து சமீபத்தில் இந்து கோவில்கள் அருகே இஸ்லாமியர்கள் கடை வைக்கக்கூடாது என சில கோவில் நிர்வாகங்கள் கட்டுப்பாடு விதித்தன. இந்நிலையில் தற்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ.வும், கர்நாடக முதல்-மந்திரியின் அரசியல் செயலாளருமான ரேணுகாச்சார்யா, இஸ்லாமியர்கள் நடத்தும் மதராசா பள்ளிகள் மாணவர்களிடையே தேச விரோதத்தை ஏற்படுத்துவதாகவும், வன்முறையை தூண்டும் வகையில் பாடம் நடத்தப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மதரசா பள்ளிகளை தடை செய்ய வேண்டும் என கர்நாடக முதல்-மந்திரி மற்றும் கல்வி மந்திரியிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது கர்நாடகாவில் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.