1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 13 ஜூன் 2022 (11:00 IST)

லேடீஸ் சீட்டில் உட்கார்ந்த ஆண்கள்; ரூ.17 ஆயிரம் வசூல்..! – போக்குவரத்து கழகம் அதிரடி!

Karnataka Bus
பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பேருந்து சீட்டுகளில் ஆண்கள் அமர்ந்து பயணித்ததற்காக கர்நாடக போக்குவரத்து கழகம் அபராதம் விதித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் உள்ளூர் போக்குவரத்திற்காக மாநில அரசு போக்குவரத்து கழகங்கள் மக்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகின்றன.

கர்நாடக போக்குவரத்து கழகம் இயக்கி வரும் பேருந்துகளில் பெண்கள் அமர்வதற்காக இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் பல ஆண்களே பெண்கள் சீட்டில் அமர்ந்து பயணம் செய்வதாக புகார்கள் உள்ளது.

இந்நிலையில் கர்நாடகா போக்குவரத்து கழக அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல்வேறு பேருந்துகளில் பெண்கள் சீட்டில் அமர்ந்த 170 ஆண்கள் பிடிபட்டதாகவும், அவர்களிடம் ரூ.17 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக பிஎம்டிசி நிர்வாகம் தெரிவித்துள்ளது.