திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 8 மார்ச் 2018 (16:11 IST)

கர்நாடகாவிற்கு தனிக்கொடி: அதிரடி காட்டும் சித்தராமைய்யா!

கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா தங்களுக்கென்று தனி கொடி வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறித்தி வந்தார். இந்நிலையில், கர்நாடக அரசின் தனிக்கொடியை அறிமுகம் செய்து வைத்தார். 
 
இந்த கொடி தற்போது மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது. கர்நாடகாவிற்கு தனி கொடியை உருவாக்க அரசு சார்ப்பில் தனிக்குழு ஒன்றை அமைத்திருந்தார். 
 
நமது தேசிய கொடியை போலவே இந்த கொடியும் மூவர்ணங்களை கொண்டுள்ளது. மஞ்சள், வெள்ளை நிறமும், சிவப்பு வண்ணம் கொண்டதாக உள்ள இந்த கொடியின் நடுவில் கர்நாடக மாநில அரசின் சின்னம் இடம்பெற்றுள்ளது. 
 
கர்நாடகாவில் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்க இவ்வாறு செய்துள்ளதாக தெரிகிறது. ஏனெனில் பாஜக அரசு தனிக்கொடு வழங்குவதற்கு விருப்பப்படவில்லை.
 
எனவே, இதையும் ஒரு காரணமாக பிரச்சாரத்தில் கூறி பாஜகவுக்கு எதிராக மக்களை திரட்டி வாக்கு சேகரிக்கும் எண்ணத்தில் இந்த செயல் செய்யப்படுகிறது என கூறப்படுகிறது.