1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Karnataka Election polling percentage at 6pm was 64%

கர்நாடகா மாநில தேர்தல்; 6 மணி நிலவரப்படி 64% வாக்குப்பதிவு

கர்நாடகா தேர்தல்
கர்நாடகத்தில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 224 தொகுகளில், 222 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது.

 
ஜெயநகர் மற்றும் ஆர்.ஆர் நகர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த தேர்தலில் காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6.30 மணி வரை நடைபெற்றது. 
 
மொத்தம் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இறுதியாக கிடைத்த தகவல்படி 6 மணி நிலவரப்படி 64% வாக்குகள் பதிவாகி உள்ளன். மேலும் அதன்பிறகு வாக்குப்பதிவு குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
அடுத்த கட்டுரையில்
அமைச்சர் செல்லூர் ராஜு நாகாக்க வேண்டி – கரூரில் நகரத்தார் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டம்