அரசியல்வாதிகள் டார்ச்சர்: டி.எஸ்.பி தற்கொலை
மங்களூரில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்த எம்.கே.கணபதி சில அரசியல்வாதிகளின் தொந்தரவால் தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம் மங்களூர் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய எம்.கே.கணபதி நேர்மையாக செயல்படும் அதிகாரி என்று பெயர் பெற்றவர். இதனால் அவர் அடிக்கடி வேலை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் நேற்று மதிகேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் காவல்துறை உடை அணிந்தப்படியே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டலில் அவர் தங்கியிருந்த அறையில், தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில், முன்னாள் அமைச்சர் ஜார்ஜ், லோக் ஆயுத்தா ஐ.ஜி. பிராணப் முகர்ஜி உள்பட பலரின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். இதனால் அவரது தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கர்நாடகாவில் கடந்த வாரம் ஒரு டி.எஸ்.பி. தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது அதன் தொடர்ச்சியாக, நேற்று ஒரு டி.எஸ்.பி. தற்கொலை செய்து கொண்டது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ச்சியாக காவல்துறை மேல் அதிகாரிகளில் மரணம் அதுவும் தற்கொலை, இதற்கு பின்னனி முழுக்க முழுக்க அரசியல் வாதிகள் தானா அல்ல வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என்று கர்நாடகா மாநிலத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.