செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (10:45 IST)

ஆயிரம் லிட்டர் பாலை ஆற்றில் விட்ட வியாபாரிகள்! – கரைபுரண்டு ஓடிய பால்!

கர்நாடகாவில் ஊரடங்கின் காரணமாக விற்க முடியாமல் போன ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை ஆற்றில் ஊற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனினும் அத்தியாவசிய கடைகள் திறக்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய கடைகளில் மக்கள் அதிகம் கூடுவதால் குறைவாகவே இயக்கப்படுகிறது.

உணவகங்கள், டீ கடைகள் ஆகியவை மூடப்பட்டுள்ளதால் பால் உற்பத்தியாள்கள் பாலை விற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் சிக்கோடி பகுதியில் உற்பத்தி செய்த பாலை விற்க முடியாததால் சுமார் 1500 லிட்டர் பாலை ஆற்றில் ஊற்றியிருக்கிறார்கள் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள் சிலர். பால் லிட்டர் 32 ரூபாய் விற்பனையாகி வரும் நிலையில் லிட்டர் 15 ரூபாய்க்கு கொடுக்க தயாராக இருந்தும் விற்க முடியாததால் ஆற்றில் ஊற்றியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.