வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 மார்ச் 2020 (13:25 IST)

எதை கொல்கிறீர்கள்? கொரோனாவையா? மனிதனையா? – கொதித்தெழுந்த சமூக ஆர்வலர்கள்!

ஊரடங்கு பிறப்பித்த நிலையில் நடைபயணமாகவே சொந்த ஊர்களுக்கு வந்த மக்கள் மீது கெமிக்கல்களை தெளித்த உத்தர பிரதேச அரசை சமூக ஆர்வலர்கள் வன்மையாக கண்டித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு மாநிலங்களில் கூலி வேலைகளுக்காக சென்ற மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேலை மற்றும் உணவு இல்லாததால் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு நடைபயணமாகவே புறப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டுமென பலர் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கால்நடையாகவே உத்தர பிரதேசம் பரேலிக்குள் நுழைந்த மக்களை போலீஸார் ஒரே இடத்தில் கூட்டமாக அமரவைத்து சாலைகளில் தெளிக்கும் கிருமிநாசினியை அவர்கள் மீது தெளித்துள்ளனர். முறையான குளியல் வசதிக்கு கூட எந்த ஏற்பாடும் செய்யாமல் மக்களை விலங்குகள் போல உத்தர பிரதேச அரசு நடத்துவதாக சமூக ஆர்வலர்கள் பலர் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். கிருமிநாசினியை மக்கள் மீது தெளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் மக்கள் தொடர்ந்து இந்த செயலை கண்டித்து வருகின்றனர்.