1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. karnataka cm meet central minister

மத்திய அமைச்சருடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு: மேகதாது திட்டத்திற்கு அனுமதியா?

bommai
மத்திய அமைச்சருடன் கர்நாடக முதல்வர் சந்திப்பு: மேகதாது திட்டத்திற்கு அனுமதியா?
கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் டெல்லி சென்றிருந்த நிலையில் அவர் நேற்று மத்திய அமைச்சர் கோவிந்த் கார்ஜோள் என்பவரை சந்தித்து உள்ளார் 
 
அவரிடம் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவது குறித்த திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது 
 
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பொம்மை மேகதாது திட்டத்தால் பெங்களூரில் குடிநீர் மற்றும் மின்சார தேவையை பூர்த்தி செய்யப்படும் என்றும் இந்த திட்டத்திற்கு விரைவில் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன் என்றும் கூறியுள்ளார் 
 
இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
About Writer
siva
அடுத்த கட்டுரையில்
தென் மாவட்ட மக்களுக்காக இரண்டு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு