திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (15:53 IST)

ரஜினிக்கு முதல்வர் பதவி சரிபட்டு வராது - பிரபல ஜோதிடர் கணிப்பு

ரஜினிகாந்த் முதல்வராக ஆசைப்பட்டால் அரசியலில் அவருக்கு பலத்த அடிகள் விழும் என பிரபல கன்னட ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் கணித்துள்ளார்.

 
அரசியலுக்கு வருவதாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கர்நாடகாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் பிரகாஷ் அம்முன்னாய் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி கூறியதாவது:
 
ரஜினிகாந்தின் ஒரு மகர ராசிக்காரர். சிம்ம லக்கினம் பொருந்தியவர். அவருக்கு துர்தரா யோகம் உள்ளது. அதன்படி, அவரை யாரும் எதிர்த்து நின்று வெற்றி பெற முடியாது. ஆனால், அருகில் இருப்பவர்கள் மூலம் அவருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே, அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 
 
அவரின் ராசிப்படி வருகிற லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் 3 முதல் 5 தொகுதிகள் அவருக்கு கிடைக்கும். அவரின் ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளது. எந்த உயரத்திற்கு சென்றாலும், அந்த தோஷம் ஒருவரை கீழே இழுத்து கொண்டு வரும். எனவே, ரஜினி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கூடாது. கட்சி தலைவராக மட்டுமே இருப்பது நல்லது.
 
ஒரு கிங் மேக்கராக இருக்க வேண்டும். அவர் கூறும் நபரையே முதல்வர் ஆக்க வேண்டும். ரஜினிகாந்தின் அரசியல் கட்சி தமிழகத்தில் மிகப் பெரும் சக்தியாக உருவெடுக்கும். அரசியலில் அவருக்கு எதிர்ப்புகள் வரும். அதை அவர் சமாளித்து வெற்றி பெறுவார்” என பிரகாஷ் அம்முன்னாய் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் தேர்தலில், தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்தாலும், 10 மணிக்கும் மேல் பாஜக முன்னிலைக்கு வந்து அங்கு ஆட்சியை பிடிக்கும் என இவர் ஏற்கனவே கணித்து கூறியிருந்தார். அவர் கூறியது படியே நடக்கவே தற்போது ஊடகங்கள் அவர் வீட்டு வாசலில் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.