திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 4 ஜனவரி 2018 (05:31 IST)

ரஜினியை சீண்ட வேண்டாம்: அதிமுகவினர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி அறிவுரை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் களத்தில் இறங்கியவுடன் அவர் மீதான விமர்சனங்களை அரசியல்வாதிகள் ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக திமுக மறைமுகமாகவும், அதிமுக போன்ற கட்சிகள் நேரிடையாகவும் ரஜினியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக அமைச்சர்கள் யாரும் ரஜினியை விமர்சிக்க வேண்டாம் என்றும் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினிகாந்தை விமர்சனம் செய்து பெரிய ஆளாக்கி அரசியலிலும் சூப்பர் ஸ்டாராக ஆக்கிவிட வேண்டாம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவினர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

ரஜினியை மேலும் மேலும் விமர்சனம் செய்வதால் அவருக்கு மக்களுக்கு மீது ஈர்ப்பு தான் உண்டாகுமே தவிர, வெறுப்பு உண்டாகாது என்றும் அவர் கூறியுள்ளார். எனவேதான் அதிமுகவினர் இனி ரஜினியை தாக்கி அதிகம் பேசமாட்டார்கள் என்று கருதப்படுகிறது.