திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 26 மே 2021 (13:48 IST)

6 மாத விவசாயிகள் போராட்டம் குறித்து கமல் டுவிட்!

மத்திய அரசு அமல் செய்த விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் தொடங்கினர். இந்த போராட்டம் தொடங்கி இன்றுடன் ஆறு மாதங்கள் ஆகிவிட்டது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்திலும் மழை வெயில் என பொருட்படுத்தாது விவசாயிகள் தொடர்ச்சியாக தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் இன்று திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் கூட இது குறித்து தனது கருத்தை வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 6 மாத விவசாயிகள் போராட்டம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது; விவசாயிகளின் போராட்டம் 6 மாதங்களை எட்டியிருக்கிறது. ஓராண்டு கால கொரோனா உள்ளிருப்பு காலத்திலும் விளைபொருட்கள் தட்டுப்பாடின்றி எப்படி கிடைத்தது என யோசித்தாலே விவசாயிகளின் மேன்மையும் தியாகமும் புரியும். அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். போராட்டம் வெற்றியடைய வேண்டும்