வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 27 மே 2023 (15:10 IST)

புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்வேன்: கமல்ஹாசன் அறிவிப்பு..!

புதிய நாடாளுமன்ற கட்டிடம் நாளை திறக்கப்பட உள்ள நிலையில் இந்த திறப்பு விழாவில் காங்கிரஸ் திமுக உள்பட 18 எதிர்கட்சிகள் கலந்து கொள்ளாது என அறிவிக்கப்பட்டது
 
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி தான் திறந்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து எதிர்க்கட்சிகள் இந்த முடிவை எடுத்து உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகத்தை பொறுத்த வரை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்துமே இந்த விழாவை புறக்கணித்த நிலையில் அதிமுக பாமக தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளன. 
 
இந்த நிலையில் கிட்டத்தட்ட திமுக கூட்டணியில் இருப்பதாக கூறப்படும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மன்ற கட்சியை இந்த விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவரை அழைக்காததால் தேசத்தின் பெருமிதம் பிளவுபட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தேசிய நலன் கருதி இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளேன் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran