1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 23 ஏப்ரல் 2023 (08:13 IST)

தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் கைது..!

கடந்த சில நாட்களாக தேடப்பட்டு வந்த காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தி வரும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக அம்ரித் பால் சிங் என்பவர் இருந்தார். இதனை அடுத்து இவர் போலீசாரால் கடந்த ஒரு மாத காலமாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் பதுங்கி இருந்த இடம் குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

இதையடுத்து அந்த இடத்தை சுற்றி வளைத்த போலீசார் அம்ரித் பால் சிங்கை கைது செய்தனர். கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்த அவர் இன்று கைது செய்யப்பட்டதை அடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva