புதன், 11 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 2 நவம்பர் 2024 (17:36 IST)

அண்டா திருடிய நபருக்கு தெருவை சுத்தம் செய்யும் தண்டனை கொடுத்த நீதிபதி..!

ஆந்திர மாநிலத்தில் பித்தளை அண்டா திருடிய நபருக்கு தெருக்களை சுத்தம் செய்யும் நூதன தண்டனையை நீதிபதி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திர மாநிலத்தில் உள்ள அங்கையா என்ற 28 வயது நபர் அங்குள்ள கோவில் ஒன்றில் நுழைந்து பித்தளை அண்டா உள்ளிட்ட சில பாத்திரங்களை திருடி சென்றுள்ளார். இது குறித்து காவல் துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், திருட்டு நடந்த சில மணி நேரத்தில் அங்கையாவை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த அண்டா உள்ளிட்ட பொருட்களை மீட்டனர்.

அதன் பின்னர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்த போது, முதன் முதலில் திருட்டில் ஈடுபட்டேன்; என்னை மன்னித்து விட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இன்று முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை அந்த நகரில் உள்ள முக்கிய சந்திப்புகள் தெருக்களை காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை சுத்தம் செய்ய வேண்டும் என்றும், நகராட்சி கமிஷனர் மற்றும் காவல்துறையினர் இதனை உறுதி செய்ய வேண்டும் என்றும் நூதன தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran