புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (18:47 IST)

பத்திரிகையாளர் கொலை வழக்கு: சாமியாருக்கான தண்டனை அறிவிப்பு

அரியானா மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர் சத்ரபதியின் நாளிதழில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குறித்த சர்ச்சைக்குரிய செய்தி வெளியானதை அடுத்து சத்ரபதி கடந்த 2002ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் தான் குற்றவாளி என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. அவருடைய தண்டனை விபரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹிமிற்கு ஆயுள் தண்டனை விதித்து பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் சற்றுமுன் தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் அரியானா மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது