வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (10:54 IST)

பெட்ரோலுக்கு ரூ.250 வரை மானியம்! – முதல்வர் அசத்தல் அறிவிப்பு!

நாடு முழுவதும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ள நிலையில் பெட்ரோலுக்கு மானியம் வழங்குவதாக ஜார்கண்ட் முதல்வர் அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை கடும் உயர்வை சந்தித்தது மக்களின் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. பெட்ரோலை தொடர்ந்து சமையல் கேஸ் உள்ளிட்டவற்றின் விலையும் வேகமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் பெட்ரோல் விலையில் மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளார். அதன்படி வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள இருசக்கர வாகன உரிமையாளர்களுக்கு இந்த திட்டத்தின் கீழ் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.25 வீதம் 10 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.250 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். இந்த அறிவிப்பு மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.