எஸ்.பி.ஐ வங்கியில் வேலை வாய்ப்புகள்

Last Modified புதன், 5 டிசம்பர் 2018 (14:20 IST)
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா நாட்டிலேயே மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாகும் . அதில் காலியாக உள்ள துணை மேலாளர் (Asst. Manager) பணியிடங்களுக்குத் தேர்வுகளை அறிவித்துள்ளது. சார்ட்டட் அக்கவுண்டட் முடித்துள்ள பட்டதாரிகள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.

மொத்தமுள்ள 39 காலியிடங்களுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளன. 21 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தேர்வுக் கட்டணம் பொதுப்பிரிவினருக்கு 600 ரூபாய் எனவும் பட்டியலினத்தவருக்கு 100 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை எஸ்பிஐ இணையதளத்திற்கு சென்று ஆன்லைன் மூலமாக மட்டுமே அனுப்ப முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கட்டணத்தை நெட்பேங்கிங்கின் மூலம் அனுப்பி தேர்வுக்கான முன்பதிவை செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் டிசம்பர் 28 என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :