ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 8 டிசம்பர் 2018 (12:53 IST)

எஸ்பிஐ பம்பர் ஆஃபர்: 5 லிட்டர் பெட்ரோல் இலவசம்! எப்படி வாங்குவது தெரியுமா?

எஸ்பிஐ வங்கி இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போடும் போது 5 லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த பம்பர் ஆஃபர் டிசம்பர் 15 வரை செல்லுபடியாகும். 
பெட்ரோல் விலை உயர்ந்த போது எஸ்பிஐ வங்கி, எஸ்பிஐ கார்டு அல்லது பீம் எஸ்பிஐ செயலி மூலம் ரூ.100க்கு அதிகமாக பெட்ரோல் போடும் போது 5 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது. இந்த சலுகை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. 
 
5 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெறுவது எப்படி? 
1. இந்தியன் ஆயில் நிலையங்களில் ரூ.100க்கு அதிகமாக பெட்ரோல் போட்டு எஸ்பிஐ கார்டுகள் அல்லது பீம் யூபிஐ மூலம் பணம் செலுத்த வேண்டும்.
 
2. பணம் செலுத்தியதும் வங்கி வழங்கும் 12 இலக்க யுபிஐ குறிப்பு எண் அல்லது 6 இலக்க அங்கீகார குறியீட்டை சேமித்து வைக்க வேண்டும்.
3. பின்னர், மொபைல் போனில் இருந்து BHIM SBI Pay: 12 digit UPI reference number DD/MM போன்ற அனைத்து விவரங்களையும் முறையே எஸ்எம்எஸ் செய்ய வேண்டும்.
 
4. இவ்வாறு ஒவ்வொரு நாளும் 10,000 எஸ்எம்எஸ் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரூ.50, ரூ.100, ரூ.150, ரூ.200 என கேஷ்பேக் வழங்கப்படும்.
 
5. ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். இந்த சலுகை 18 வயது நிரம்பியவர்களுக்கு மட்டுமே பொருந்தும். 
 
6. வெற்றி வாடிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு இரண்டு வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.