கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் பேரில் டெபாசிட்… முதல்வர் அறிவிப்பு!
கோவிட் 19 வைரஸ் தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பெயரில் வங்கிக் கணக்கு தொடரப்பட்டு 10 லட்சரூபாய் டெபாசிட் செய்யப்படும் என ஆந்திர முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல் அலையில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட இப்போது பல மடங்கு அதிகமாகியுள்ளது. இந்த அலையில் பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை கொரோனாவால் இழந்துள்ளனர். அவர்களை ஆளாக்க வேண்டிய பொறுப்புகள் அரசுக்கு உள்ளன. இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜகன் மோகன் ரெட்டி பெற்றோரை இழந்த குழந்தைகள் பேரில் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு தலா 10 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.