1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Jegadesh shutter joined in bjp again

பாஜகவில் இருந்து காங்கிரஸ், காங்கிரஸில் இருந்து பாஜக: கட்சி மாறும் ஜெகதீஷ் ஷெட்டர்..!

பாஜக
கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறிய நிலையில் தற்போது மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு மாறி உள்ளார். 
 
 சமீபத்தில் நடந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 
 
இந்த நிலையில் தற்போது மீண்டும் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவை சந்தித்து மீண்டும் பாஜகவில் அவர் இணைந்து கொண்டார்.  மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவில் மீண்டும் அவர் இணைந்திருக்கும் நிலையில் அவருக்கு எம்.பி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
சிகிச்சையில் உள்ள செய்தியாளருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி -முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு