வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 25 ஜனவரி 2024 (13:37 IST)

பத்திரிகையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன?” அமைச்சர் எல் முருகன்

L Murugan
நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா செய்தியாளராக பணியாற்றிவரும் நேசபிரபு மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சமூகவிரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக, பாமக, உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பத்திரிக்கையாளர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன என்று மத்திய இணை அமைச்சார் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: பல்லடம் நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீது மர்ம நபர்கள் கொடூர தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது.

தன் உயிருக்கு ஆபத்து என போலீஸிடம் தெரிவித்தபபோது ஒரு காவலர் ஸ்டேசனில் ஆளில்லை பாதுகாப்பு வேண்டுமெனில் நீங்களே ஸ்டேசன் வருமாறு கூறியுள்ளார். ஒரு காவலர் இப்படி பேசலாமா? அதன் உள்நோக்கம் என்ன? போலி திராவிர்ட மாடல் அரசில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுக்காபு இல்லை என்றால் மக்களின் நிலை என்ன ஆகும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், நேசபிரபு மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நேசபிரபுக்கு போதிய சிகிச்சை கொடுக்கவும், இழப்பீடு வழங்கவும் அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்