ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 16 ஜூலை 2016 (16:51 IST)

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கால் நீதித்துறைக்கு அவப்பெயர்: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கருத்து

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் இந்தி நடிகர் சல்மான்கான் போன்றோரின் வழக்குகள் விசாரிக்கப்பட்ட விதத்தால் நீதித்துறைக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற நீதிபதியும், கர்நாடக மாநில லோக் ஆயுக்தாவின் முன்னாள் தலைவருமான சந்தோஷ் ஹெக்டே கூறியுள்ளார்.


 
 
ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சந்தோஷ் ஹெக்டே, ஜெயலலிதா மற்றும் சல்மான்கான் வழக்குகளில் அவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக அவர்களின் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது நீதித்துறைக்கு அவப்பெயரை ஏற்பட்டுத்தியுள்ளது.
 
பணம், வசதி படைத்தவர்கள், அதிகாரமுள்ளவர்களுக்கு விரைவாக ஜாமீன் கிடைக்கும், தீர்ப்பும் கிடைக்கும் என்ற தவறான எண்ணத்தை மக்கள் மத்தியில் இந்த வழக்குகள் புகுத்தியுள்ளன.
 
பல ஆண்டுகளாக இழுத்தடித்த ஜெயலலிதா வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்தது. இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டவுடன் அவருக்கு ஜாமீன் கிடைத்தது.
 
இந்த வழக்கை எதற்காக மூன்று மாதத்தில் முடிக்க உத்தரவிட வேண்டும். நூற்றுக்கணக்கான வழக்குகளில் 4 முதல் 5 ஆண்டுகளுக்கு பிறகு கூட ஜாமீன் கிடைக்காமல் பலர் சிறையில் வாடுகின்றனர்.
 
இதே போன்று சல்மான் வழக்கிலும், 14 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இவருக்கு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட்ட 1 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது.
 
ஜெயலலிதா மற்றும் சல்மான் கான் வழக்குகளில் ஏன் அவசரம் காட்டப்பட்டது?. வழக்கத்துக்கு மாறாக இந்த இரு வழக்குகளையும் அவசர, அவசரமாக விசாரணைக்கு ஏன் எடுத்து கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற வழக்குகளால் நீதித்துறைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது என அவர் பேசினார்.