செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 அக்டோபர் 2021 (11:32 IST)

”ஆத்தாடி.. பாக்க முதலை மாதிரியே இருக்கு” – அரியவகை மீனை பிடித்த ஜார்கண்ட் மீனவர்!

ஜார்கண்டில் மீனவர் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது முதலை போன்ற முகம் கொண்ட மீன் சிக்கியது வைரலாகியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தின் அம்லாடண்ட் கிராமத்தை சேர்ந்த நபர் ஏரி ஒன்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அதில் கனமான மீன் ஒன்று சிக்க எடுத்து பார்த்தபோது முதலை தலையுடன் மீன் உடலுடன் அந்த மீன் இருந்துள்ளது.

இந்த அரியவகை மீனை காண மக்கள் பலரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். மேலும் இந்த மீனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.