செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (14:05 IST)

அள்ளிக் குடிக்கலாம்.. அப்படியொரு சுத்தம்..! – மேகாலயா நதி குறித்து ஜல்சக்தி அமைச்சகம் ட்வீட்!

மேகாலயாவில் உள்ள நதி ஒன்றின் புகைப்படத்தை பகிர்ந்துள்ள மத்திய ஜல்சக்தி அமைச்சகம் உலகின் சுத்தமான நதி என அதை குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு நதிகள் பாய்ந்து வந்தாலும் நதிகளில் தொழிற்சாலை கழிவுகள் மற்றும் நதியின் ஓட்டத்தால் ஏற்படும் சேறு போன்றவற்றால் நதிகள் பொதுவாக அவ்வளவு சுத்தமாக இருப்பதில்லை.

இந்நிலையில் ஜல்சக்தி அமைச்சகம் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. மேகாலயாவில் உள்ள உம்ங்கோட் என்ற அந்த நதி கண்ணாடி போல தெளிவாக உள்ள நிலையில் அதில் காற்றில் மிதப்பது போல பயணிகள் படகுகளில் செல்கின்றனர். இந்த புகைப்படத்தோடு ” மேகாலயா மாநிலத்தில் ஷில்லாங் நகரிலிருந்து 100 கிமீ தொலைவில் உம்ங்கோட் நதி உள்ளது. இதில் தண்ணீர் சுத்தமாகவும், தெளிவாகவும் உள்ளதால், இந்த படகு காற்றில் இருப்பது போல் தெரிகிறது; நமது நதிகள் அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். மேகாலயா மக்களுக்கு ஹாட்ஸ் ஆஃப்” என்று ஜல்சக்தி அமைச்சகம் பதிவிட்டுள்ளது.