1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 24 ஏப்ரல் 2021 (23:16 IST)

கோவாக்‌ஷின் தடுப்பூசி விலையும் உயரும் எனத் தகவல்

கோவாஷீல்டை தொடர்ந்து  கோவாக்‌ஷின் தடுப்பூசி விலையும் உயரும் எனத் தகவல் வெளியாகிறது.

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவிலும் இந்தத் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில் கொரோனாவுக்கு தடுப்பூசி அனைவரும் போட வேண்டுமென அரசு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி வருகிறது.

இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி மருந்தின் விலையை பாரத் பயோடெக் நிறுவனம் அதிகரித்துள்ளது.

மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் மருந்து, ரூ.600 எனவும், தனியார் மருத்துவமனைகளுக்கு விலை ரூ.1200 எனவும் நிர்ணயித்துள்ளது.கோவாஷீல்டை தொடர்ந்து  கோவாக்‌ஷின் தடுப்பூசி விலையும் உயரும் எனக் கூறப்பட்டுள்ளது.