வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2024 (16:30 IST)

வானிலை ஆய்வுக்கான இன்சாட்-3டிஎஸ் செயற்கைகோள்: இஸ்ரோவின் இன்னொரு சாதனை..!

ISRO
நிலம் மற்றும் கடல் பரப்புகளை கண்காணிக்கும் வகையில் இன்சாட்-3டிஎஸ் என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வரும் 17ஆம் தேதி விண்ணில் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  
 
வானிலை முன்னறிவிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் வானிலை ஆய்வு சேவைகளை மேம்படுத்தும் வகையில் இன்சாட்-3டிஎஸ் என்ற செயற்கைக்கோள் இஸ்ரோ வடிவமைத்துள்ள நிலையில் இந்த செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து  பிப்ரவரி 17ஆம் தேதி விண்ணில் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அன்று மாலை 4 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும் என்றும்  புவி வட்ட பாதையில் இந்த செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டு அங்கிருந்து வானிலை முன்னறிவிப்பு உள்பட பல்வேறு வானிலை சேவைகளை அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 நிலம் மற்றும் கடல் பரப்புகளை இந்த செயற்கைக்கோள் கண்காணிக்கும் என்றும் பேரழிவு எச்சரிக்கை அமைப்புகளுக்கான தரவுகளையும் வழங்கும் என்றும்  வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக இந்த செயற்கைக்கோள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இது இஸ்ரோவின் புதிய சாதனையாக கருதப்படுகிறது.
 
Edited by Mahendran