எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஏவும் தேதி.. தள்ளி வைத்தது இஸ்ரோ.. என்ன காரணம்?
இஸ்ரோ அதிநவீன இஓஎஸ்-08 செயற்கைக்கோளை உருவாக்கியுள்ள நிலையில் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் ஆகஸ்ட் 15-ம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதாவது 16ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளதாகவும் இஸ்ரோ அறிவித்துள்ளது.
புவி கண்காணிப்புக்காக எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹரிகோட்டாவில் இருந்து காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
கார்டோசாட், ஸ்காட்சாட், ரிசாட் உள்ளிட்ட தொலையுணர்வு பயன்பாட்டுக்காக இந்த செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலைநிறுத்தப்படுவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
176 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 475 கி.மீ தொலைவில் உள்ள புவி தாழ் வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும் என்றும், பகலில் மட்டுமின்றி இரவிலும் துல்லியமாக படம் எடுக்கக்கூடிய திறன் செயற்கைக்கோளுக்கு உண்டு என்றும், இந்த செயற்கைக்கோள் உதவியால் சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை ஆகிய பணிகளை கவனிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Siva