வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 ஜனவரி 2024 (17:58 IST)

ஆதித்யா எல்1 விண்கலத்தின் மேக்னட்டோமீட்டரின் சென்சார் வேலை செய்கிறதா? இஸ்ரோ

கடந்த சில மாதங்களுக்கு முன் சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலத்தின் மேக்னட்டோமீட்டரின் சென்சார் வெற்றிகரமாக செயல்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
 
 கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ம் தேதி அனுப்பப்பட்ட  ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட நிலையில் இந்த விண்கலம் எல்1 எனும் இலக்கை வெற்றிகரமாக அடைந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
 
இந்த நிலையில் ஆதித்யா எல்1 விண்கலத்தின் மேக்னடோமீட்டர் பூம் ஆய்வு கருவி வெற்றிகரமாக செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளது
 
Edited by Siva