செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஜூலை 2019 (20:46 IST)

இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு: சபாநாயகர் உத்தரவால் குமாரசாமியின் அதிரடி!

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏக்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து முதல்வர் குமாரசாமி தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்ததாக கருதப்படுகிறது. எனவே குமாரசாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என பாஜக வலியுறுத்த கடந்த வாரமே கர்நாடக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது
 
ஆனால் திங்கட்கிழமை வரை சபாநாயகர் அவையை ஒத்தி வைத்தார். அதனையடுத்து இன்றாவது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த புதன்கிழமை வரை முதல்வர் குமாரசாமி அவகாசம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
 
இந்த நிலையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக சட்டசபை சபாநாயகர் திடீரென உத்தரவு பிறப்பித்தார். சபாநாயகரின் இந்த அதிரடி உத்தரவால் காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் கர்நாடக சட்டசபையில் கடும் அமளி செய்தனர். காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்களின் அமளியால் கர்நாடக சட்டசபை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது
 
இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தாமலேயே முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், அவர் இன்று இரவு கர்நாடகா ஆளுனர் வஜூபாய் வாலாவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளிப்பார் என்றும் கூறப்படுகிறது