சனி, 20 செப்டம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 20 ஜூலை 2020 (17:05 IST)

பைக்கை தொட்டது குற்றமா ? சாதி பெயரைச் சொல்லி இளைஞரை தாக்கிய கும்பல்

பைக்கை தொட்டது குற்றமா ? சாதி பெயரைச் சொல்லி இளைஞரை தாக்கிய கும்பல்
உலகம் எத்தனை முன்னேற்றத்தின் பாதையில் சென்றாலும் இன்னும் சாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகள் ஓயவில்லை எனபதற்கு ஒரு சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரைத் தாண்டியுள்ள  விஜயவாடாவில் மினாஜி என்ற கிராமம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் ஒரு இளைஞர் ( 28 ).

இவர் அங்குள்ள வேறொரு சமூகத்தைச் சேர்ந்தவரின் பைக்கை தொட்டதற்காக ஒரு கும்பல் இளைஞரை சரமாரியாகத் தாக்கியுள்ளது.

அந்த கும்பல் கம்புகள், செருப்புகள் தாக்குவது போன்ற விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து இளைஞரின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதில் சென்னம்மா என்ற பகுதியில் நிறுத்திவைகப்பட்ட பைக்கை என் மகன் தொட்டதற்காக ஒரு கும்பல் அவனைத் தாக்கியது. அதைத் தடுக்க முயன்ற என் மனைவி மற்றும் மகளையும் என்னையும் தாக்கினர். என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.