செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: திங்கள், 20 ஜூலை 2020 (16:48 IST)

வெள்ளத்தில் பைக்குடன் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்…பரவலாகும் வீடியோ

அசாம் மாநிலத்தில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு பாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர் வெள்ளத்தில் அடித்துச் செல்வது போன்ற வீடியோ பரவலாகி வருகிறது.

அசாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சுமார் 28 மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கொரொனா காலம் என்பதால் அவர்கள் நிலைமை மேலும் பரிதாகமாக உள்ளது.

இந்நிலையில் ஒரு இளைஞர் தற்காலிகமாக போட்டப்பட்டிருந்த பாலத்தில் பைக்கில் செல்லும்போது தவறி கீழே விழுந்தார். அவர் பைக்குடன் வெள்ளைத்தில் அடித்துச் செல்லப்பட்டார். உடனே அங்குள்ள மக்கள் அவரைக் காப்பாற்றினர்.