திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 27 ஜூலை 2019 (20:54 IST)

ஈரன் சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது - 2 இந்தியர்கள் மீட்பு

ஈரானின் அன்சாலி துறைமுகத்தில் இருந்து, பாகாங் என்ற சரக்குக் கப்பல் ரஷ்யாவில் உள்ள மக்காச்சாலா என்ற பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தது. இந்தப் கப்பல் ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு சொந்தமானது ஆகும்.
இக்கப்பலில் மொத்தம் 9 பணியாளர்கள் இருந்தனர்.அவர்களில் 7 பேர் ஈரான் மற்றும் இருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தக் கப்பல் அசர்பைன் நாட்டின் பகு அருகேயுள்ள ஒரு லஸ்காரன் என்ற துறைமுகம் அருகே சென்றுகொண்டிருந்த போது, திடீஎன்று கடலில் மூழ்கியது. அந்த நேரத்தில் ஊழியர்கள் தங்களை காப்பாற்ற சொல்லி கூக்குரலிட்டனர். அங்கு இரண்டி ஹெலிகாப்படர்கள் விரைந்து சென்று அனைவரைஉம் மீட்டனர். இந்தக் கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கிவிட்டது. நீர் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகிறது.