செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (17:37 IST)

உலக பணக்காரர்களில் நான்கு இந்தியர்கள் ஒரு தமிழர்- யார் யார் தெரியுமா?

இந்த ஆண்டிற்கான உலக பணக்காரர்களின் தரவரிசை பட்டியலை ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவை சேர்ந்த நான்கு பேர் இடம் பிடித்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டிற்கான உலக பணக்காரர்கள் தரவரிசையில் மொத்தம் 500 பணக்காரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இந்த தரவரிசையானது அவர்களது சொத்து மதிப்பு மற்றும் உலக பங்கு சந்தையில் அவர்களின் நிறுவனங்களில் பங்குவிகிதம் ஆகியவற்றை கணக்கிட்டு தயார் செய்யப்பட்டுள்ளது.

உலக கோடீஸ்வரர்களில் 14வது இடத்தை பிடித்திருக்கிறார் முகேஷ் அம்பானி. இவரது சொத்து மதிப்பு 51.3 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் 5130 கோடி ரூபாய்).

விப்ரோ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் அஸிம் ப்ரேம்ஜி 20 பில்லியன் டாலர்களை சொத்துகளாக சேர்த்து 48வது இடத்தில் இருக்கிறார். இந்தியாவில் பெங்களூரை மையமாக கொண்டு இயங்கும் விப்ரோ நிறுவனத்தில் உலகம் முழுவதில் இருந்தும் மொத்தம் 1 லட்சத்து 60 ஆயிரம் பேர் பணி புரிகிறார்கள்.

உலக கோடீஸ்வரர்களில் 91வது இடத்தில் இருக்கிறார் தமிழரான ஷிவ் நாடார். ஹெ.சி.எல் நிறுவனத்தை தொடங்கிய இவர் பத்மபூஷண் விருதினை பெற்றுள்ளார். இவரது அம்மா வாமசுந்தரதேவி தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சொத்து மதிப்பு 14.7 பில்லியன் டாலர்கள்.

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 94வது இடத்தில் இருக்கிறார் உதய் கோடக். கோடக் மஹிந்திரா வங்கியின் நிறுவனரான இவரது சொத்து மதிப்பு 14பில்லியன் டாலர்கள்.

இவர்களை தவிர மொத்த 500 பணக்காரர்களில் ஹிந்துஜா குழுமத்தின் நிறுவனர்களான கோபிசந்த் ஹிந்துஜா, பிரகாஷ் ஹிந்துஜா, அஷோக் ஹிந்துஜா ஆகியோர் 498,499 மற்றும் 500வது இடங்களை பிடித்துள்ளனர். இவர்கள் மூவருமே சகோதரர்கள். அஷோக் லேலண்ட், இண்டஸ்லேண்ட் வங்கி, கல்ஃப் ஆயில் நிறுவனம் என இவர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வகித்து வருகிறார்கள். தவிர உலகமெங்கும் மேலும் பல தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரது சொத்து மதிப்பும் தலா 4.13 பில்லியன் டாலர்கள்.