திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : திங்கள், 16 டிசம்பர் 2019 (14:42 IST)

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டம் துரதிஷ்டவசமானது - பிரதமர் மோடி

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதிலும் இருந்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன. இந்நிலையில்  'குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் துரதிஷ்டவசமனாது. வருத்தமளிக்கிறது' என பிரதமர் மோடி தனது டுவிட்ட ர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டம் துரதிஷ்டவசமனாது. வருத்தமளிக்கிறது
 
நாட்டில், விவாதம், கலந்துரையாடல், மற்றும் எதிர்ப்பு தெரிவிப்பதும் என்பது அத்தியாவசியமானது. ஆனால் பொதுச்சொத்துக்களுக்கு சேதம் மற்றும் இடையூறு விளைவிப்பது பண்பாடு அல்ல என தெரிவித்துள்ளார்.