வாட்ஸ் ஆப்பில் 2 புதிய அப்டேட்கள் அறிமுகம்! பயனர்கள் மகிழ்ச்சி
உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதில் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
இந்த வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காகவும், வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக புதிய அப்டேட்டுகளை இந்த நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.
அதன்படி, வாஸ்ட் ஆப்பில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதில், தனிப்பட்ட சாட்களை போன்று சேனலிலும் வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது மெட்டா நிறுவனம்.
மேலும், சேனல்களில் பகிரப்படும் புகைப்படங்களை பயனர்கள் தங்களின் ஸ்டேட்டஸில் நேரடியாக பதிவிடும் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில், வாட்ஸ் ஆப்பில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போது பயனர் Play செய்யும் ஆடியோவை எதிர்முனையில் இருப்பவர் கேட்கும்படி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.