திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 9 ஜனவரி 2024 (20:33 IST)

வாட்ஸ் ஆப்பில் புதிய அப்டேட்....வாடிக்கையாளர்கள் குஷி

WhatsApp
வாட்ஸ் ஆப்பில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போது பயனர் Play செய்யும் ஆடியோவை எதிர்முனையில் இருப்பவர் கேட்கும்படி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக  மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் சமூக வலைதளங்களில் தாக்கம் அதிகரித்துள்ளது. இதில் வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பல கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்த வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காகவும், வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக புதிய அப்டேட்டுகளை இந்த நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன.

அதன்படி, வாஸ்ட் ஆப்பில் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதில், வாட்ஸ் ஆப்பில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போது பயனர் Play செய்யும் ஆடியோவை எதிர்முனையில் இருப்பவர் கேட்கும்படி புதிய அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக  மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட வீடியோ கால்கள் மட்டுமின்றி, குரூப் கால்களுக்கும் இந்த அம்சம் பொருந்தும் எனவும், இது சோதனை முடிந்து விரைவில் நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.