திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 18 ஜூன் 2020 (09:23 IST)

எங்க ஆட்டம் வேற லெவல்ல இருக்கும்! – சீன பொருட்களுக்கு தடை!

சீனாவுடனான மோதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்த நிலையில் சீன பொருட்களுக்கு தடை விதிக்க அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

லடாக் எல்லையில் சீனா – இந்திய ராணுவத்தினரிடையே எழுந்த திடீர் மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்களும், சீன தரப்பில் 34 வீரர்களும் உயிரிழந்தனர். இந்திய வீரர்களை தாக்கியதற்காக பலரும் சீனாவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சீனாவுக்கு எதிராக போர் உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதை விடவும் முன்னோக்கி சீன பொருட்களை தடை செய்து எதிர்ப்பை காட்ட பலர் முனைந்துள்ளனர்.

இந்நிலையில் சீன பொருட்களை இந்தியர்கள் உபயோகிக்க கூடாது என பலர் சமூக வலைதளங்கள் வாயிலாக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில் ”கெய்ட்” என்றழைக்கப்படும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு சீன பொருட்களை தடை செய்யப்போவதாக அறிவித்துள்ளது. இதன் முதல்கட்டமாக 2021க்குள் சீனாவிலிருந்து இறக்குமதியாகும் சீனாவிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய உள்ளதாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பிரவீண் கண்டோவால் தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக தடை செய்யப்படும் 500 சீன பொருட்களில் எலக்ட்ரானிக் உபகரணங்கள், விளையாட்டு பொம்மைகள், துணிகள், வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவை அடங்கும். இதற்கு பதிலாக இந்திய தயாரிப்புகளை ஊக்குவிக்கவும், திரை நடிகர்கள் சீன பொருட்களுக்கான விளம்பரங்களில் நடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.