வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (16:41 IST)

தெருவுக்குள் ஆர்ப்பரித்த வெள்ளம்; அடித்துசென்றவரை மீட்ட இளைஞர்கள்! – வைரல் வீடியோ!

ராஜஸ்தானில் தெரு ஒன்றில் அடித்து செல்லும் வெள்ளம் ஒரு நபரை இழுத்து செல்ல சுற்றியிருந்தவர்கள் அவரை காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

தென்மேற்கு பருவக்காற்றால் வட மாநிலங்களில் மழை பொழிந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் ஜெய்பூரின் தெருப்பகுதி ஒன்றில் மழை வெள்ளம் காட்டாற்று வெள்ளம் போல கரை புரண்டு ஓட, அதில் ஒரு நபர் தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டுள்ளார். அவர் தண்ணீரில் அடித்துக் கொண்டு வருவதை பார்த்த சிலர் உடனடியாக விரைந்து அவரை பிடித்து மீட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.